முஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கைமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங்கேறிக் கொண்டிருப்பதாக   முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹகீம் நேற்று பாராளுமன்றில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற சாட்சியம் சஞ்சிகை வெளியீட்டின் போது குறிப்பிட்டார். 

மேலும் அவர் உரையாற்றுகையில் "யுத்த காலத்தின் போதும், அதற்க்கு முந்திய காலங்களின் போதும் சுற்றாடலையும், புராதன தளங்களையும் முஸ்லீம்களே அரசின் பிரதிநிதிகளாக நின்று பாதுகாத்தவர்கள், இன்று அவர்களை சுரண்டுவதற்காகவே இவ்வாறான கஷ்ட்டங்களை வேண்டுமென்று அவிழ்த்து விடுகின்றனர். 

இவ்வாறு செயல்பட்டதன் பின்னணியில் சென்ற அரசு எவ்வாறான பதிலைப் பெற்றுக் கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும், அதேபோன்று பொறுப்பில்லாத நிலையை இவ்வரசும் காட்டுமாயின் இந்நாட்டுக்கு விமோசனம் என்பதே இல்லாமல் போய்விடும்.

முஸ்லீம் காங்கிரஸ் எது செய்தாலும் பிழை என்பது சிலருக்கிருக்கின்ர வியாதி, சமூகத்தின் தேவையை உணர்ந்து கொண்டவர்கள் ஆக்கபூர்வமாக சிந்திக்க கடமைப்பட்டவர்கள். எவருக்காகவும் முஸ்லீம் காங்கிரஸ் தாழ்ந்தோ, அல்லது அதனது கடமையில் இருந்து பிறழ்ந்தோ செல்லாது. மிக நிதானமாக நாம் பயணிக்க வேண்டியுள்ளது. முஸ்லீம்கள் மீது இனவாதத்தை திணிக்கும் கோழைகள் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப் பாடல் வேண்டும் இல்லாவிடின் அரசு மிக சிக்கலான நிலைமையினை முகங்கொடுக்க வேண்டியிருக்கும்" எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில், பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழா குறித்து சிறப்புரையாற்றினார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துவருகின்ற அபிவிருத்திகள் உள்ளடங்கிய செயற்பாடுகளை தொகுத்தே “சாட்சியம்” எனும் மாதாந்த சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகள், உயர்பீட உறுப்பினர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேரு தரப்பினரும் இந்நிகழ்வில்கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும். 

Post a Comment

0 Comments