About Me

header ads

அமெரிக்காவை இடை மறித்து திருப்பிய சீனா - முறுகல் ஆரம்பம்



தென்சீனக் கடல் பகுதியில் பறந்த அமெரிக்க உளவு விமானத்தை சீன போர் விமானங்கள் இடைமறித்து திருப்பியனுப்பியுள்ளது.
குறித்த நடவடிக்கை மூலமாக சர்வதேச சட்டங்களை மீறி சீனா செயற்படுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹொங்கொங்கின் தென் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் தென்சீனக் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையின் உளவு விமானங்கள் பறந்து சென்றன.
குறித்த இந்த விமானங்களை சீன விமானப் படையின் 2 போர் விமானங்கள் வழிமறித்து திருப்பி அனுப்பியிருந்தன.
இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள அமெரிக்கா, சர்வதேச சட்டங்களை மீறி சீனா செயற்படுகிறதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்க விமானங்கள் சர்வதேச எல்லையிலேயே பறந்ததாகவும் அவற்றை சீன போர் விமானங்கள் இடைமறித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன் தமது கண்டனத்தை சீன தரப்பிடம் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments