About Me

header ads

தென்னிலங்கையில் இருந்து 300 பௌத்த துறவிகள் யாழில்



தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த 300க்கும் அதிகமான பௌத்த துறவிகள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு நயினாதீவு நாக விகாரையில் பௌத்த சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
குறித்த பௌத்த துறவிகள் கொண்ட குழு கடந்த வியாழக்கிழமை நாவற்குழி பகுதியில் அமைக்கப்படும் சட்டவிரோத விகாரையில் பௌத்த சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு உள்ளனர். என முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. இருந்த போதிலும் அவர்கள் அன்றைய தினம் யாழ்ப்பணத்திற்கு வருகை தரவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பணத்திற்கு பேருந்தில் வருகை தந்த குறித்த குழுவினர் பலாலி பகுதியில் தங்கி நின்ற பின்னர் நேற்று சனிக்கிழமை நயினாதீவு நாக விகாரைக்கு சென்று உள்ளனர். அங்கு இரவு பௌத்த சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

Post a Comment

0 Comments