கல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்

"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸே  வழங்கியது. அதுவும் எமது முதன்மை மகன் மர்ஹூம்  முகைதீன் அப்துல் காதர் மூலமாக நமக்கு கிடைக்கச்செய்தது" என மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் 13 வது  ஞபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கல்குடா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய அபிவிருத்தி குழு தலைவர் அன்வர் நௌஷாத் தெரிவித்தார். 

வாழைச்சேனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சகோ. ALM. லியாபிதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட போதே  இவ்வாறு கூறினார். இந்நிகழ்வில் முஸ்லீம் காங்கிரசின் மூத்த போராளிகளான AB .சலீம் கான், AM .ஹுசைன், MM . இஸ்மாயில், YL . மன்சூர், AM . சுபியான், ABM . இர்பான் ஆசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் அவர் உரையாற்றுகையில், மு.கா மீது உண்மையான பற்றுக் கொண்ட போராளிகளை கொண்ட தொகுதியாக மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட பெருமை நமக்குள்ளது. இந்நிலையில் கடசியின் மீது எவ்வித எதிர்பார்ப்புமில்லாத நமது மக்கள் கடசிக்கும் தலைமைக்கும் இக்கட்டான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கை கொடுத்துள்ளனர். தலைமை மீது பிரயோகிக்கப்படும் எல்லாவகையான அழுத்தங்களையும் மானசீகமாக புரிந்து கொண்டு அதற்கு துணை புரிய தயாராக இருக்கிறோம். கட்சிக்குள் இன்று இருக்கின்ற சிக்கல்களை அவிழ்க்கும் பொறுப்பில் தலைமையை நாம் ஆகர்ஷிக்கிறோம். தலைமைக்கு துணையாக கல்குடாவின் போராளிகள் தயாராக இருக்கின்றார்கள். 

தனிப்பட்டவர்கள் தமது சுயநலனுக்காக கட்ச்சியின் பெயரைக்கொண்டு நமது தொகுதியின் விருத்தியில் பெரிதும் பொடுபோக்கை காட்டினார்கள். அவர்கள் தான் இப்போது தலைமையை குறை கூறுகின்றவர்கள் அவர்களை நாம் விரட்டியடிக்க தயாராக இருக்கிறோம். மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இவ்வாறான ஒரு தலைமைத்துவத்தை நமக்கு வழங்கியிருப்பார். இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நமக்கான  தலைமை பெறுவதில் நாம் கவனமாக இருந்துவிட வேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்கள் மீதான துஆ பிரார்த்தனையும் இரவுப்போசனத்துடனும் நிகழ்வுகள் நிறைவு பெற்றன. 

Post a Comment

0 Comments