ரிசாட்டின் பொய் அதிர்வும் YLS ஹமீடின் ஆக்ரோசமும் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 11, 2016

ரிசாட்டின் பொய் அதிர்வும் YLS ஹமீடின் ஆக்ரோசமும்


 YLS ஹமீட்
--------------------------------------------
இன்று (11/12/16) வசந்தம் தொலைக்காட்சியில் அதிர்வு நிகழ்ச்சி சுமார் 9.15  மணிக்குப் பின்னர் தான் எனக்கு பார்க்க கிடைத்தது . அதில் றிசாட் பதியுத்தீன் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைத்து தன்னை ஒரு சுத்தத் தங்கமாகவும் ஏனையவர்களே பிழையானவர்கள் போன்றும் காட்டுவதற்கு மிகவும் பிரயத்தனப்பட்டார். இன்ஷா அல்லாஹ் இன்னும் இரண்டொரு தினங்களில் இந்நிகழ்ச்சியை யூடியூப்பில் பார்வையிடலாமென நினைக்கிறேன் . அதன் பின் எனது முழுமையான பதிலை இன்ஷா அல்லாஹ் வெளியிடுவேன். அது வரை இந்த நிகழ்ச்சியை நான் கேட்டவரை உள்ள விடயங்கள் தொடர்பாக இப்போதைக்கு பின்வரும் கேள்விகளைப் பதிவிட விரும்புகின்றேன் .

1) நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்றால் என்னோடு ஒரு பகிரங்க தொலைக்காட்சி விவாதத்திற்கு வரத்தயங்குவதேன்? அவ்வாறான ஒரு விவாதத்திற்கு நீங்கள் தயாரா?

2)  உங்களது புதிய செயலாளரைத் தடைசெய்து என்னை செயலாளராக அங்கீகரிக்குமாறு நான் நீதிமன்றம் சென்றதாகவும் எனது அந்தக்கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டதாகவும் உங்களது புதிய செயலாளரே சட்டப்படியான செயலாளர் என்றும் கூறினீர்கள். அவ்வாறு நீதிமன்றம் நிராகரித்திருந்தால் இன்னும் ஏன் வழக்கு நடைபெறுகின்றது. நீங்கள் ஏன் நீதிமன்ற படிக்கட்டு ஏறி இறங்குகிறீர்கள்? அடுத்ததாக நீதிமன்றம் எனது கோரிக்கையை நிராகரித்து உங்கள் செயலாளரை இயங்க அனுமதித்திருந்தால் தேர்தல் ஆணையாளர் ஏன் அந்த செயலாளரை இன்னும் அங்கீகரிக்க வில்லை. தேர்தல் ஆணையரின் இணையதளத்தில் ஏன் அவருடைய பெயர் இடம் பெறவில்லை; என்பதற்கு. உங்கள் பதில் என்ன? றிசாட். உங்களுக்கு காது குத்தி இருக்கின்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு யாரும் காது குத்தவில்லை, என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். பச்சைப் பொய்யை தன்னை ஒரு இஸ்லாமியன் என்று அடிக்கடி கூறிக்கொண்டு நாக்கூசாமல் பகிரங்கமாக கூறுகின்ற தைரியம் முஸ்லிம் அரசியலில் உங்களுக்குத்தான் இருக்கின்றது.

3) தலைமைத்துவ சபையின் முடிவுகள் யாப்பின் பிரகாரம் 2/3 பெரும்பான்மையினால் எடுக்கப்படலாம் என்று கூறினீர்களே! அது யாப்பின் எத்தனையாவது சரத்து என்று கூறமுடியுமா ? யாப்புத்தெரியாது, என்பதை தொலைக்காட்சியிலுமா வந்து கூறவேண்டும் ?

4) கட்சியில் தலைவர் என்பது தலைமைத்துவ சபை என்பதை ஏற்றுக்கொண்டீர்கள்.? அதே நேரம் தேசியப்பட்டியல் தொடர்பாக கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடி முடிவெடுத்ததாக சொன்னீர்கள் . அவ்வாறாயின் தலைமைத்துவ சபையைக்கூட்டி ஏன் முடிவெடுக்க வில்லை. தலைமைத்துவ சபையைவிட கட்சியில் முக்கியமானவர்கள் இருக்கமுடியுமா? அந்த முக்கியமானவர்களின் கூட்டத்திற்கு கட்சியின் செயலாளரை ஏன் அழைக்கவில்லை. அதுதான் சதியா? எது எவ்வாறாயினும் தலைமைத்துவ சபையின் அங்கீகாரம்கூட இல்லாமல் தானும் கட்சியின் தனித்துவ தலைவராக இல்லாத நிலையில் நீங்கள் எவ்வாறு முடிவு எடுத்தீர்கள். அது துஷ்பிரயோகமில்லையா?

5) நீங்கள், இரண்டு தேசியப்பட்டியல் கிடைத்திருந்தால் ஜமீலுக்கும் ஒன்று வழங்கப்பட்டிருக்கும் என்றீர்கள். அவ்வாறு ஜமீலுக்கும் வழங்குவதானால் புத்தளத்திற்கு எவ்வாறு வழங்க முடிந்திருக்கும். பின்னர் கூறினீர்கள் , இரண்டு கிடைத்திருந்தால் இரண்டாவது செயலாளருக்கு கிடைத்திருக்குமென்று. அப்படியானால் அப்பொழுதும் ஜமீல் ஏமாற்றப்பட்டுத்தான் இருந்திருப்பார். அப்படியானால் சாய்ந்தமருது மக்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதி முனாபிக்தனமானது, என்பதை பகிரங்கமாகவே நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள்.
அவ்வாறானால் நீங்கள் ஒரு நயவஞ்சகன் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

6) நீங்கள் கூலிக்கு ஊடகவியலாளர்களை வைத்து பொய்யாக எழுதுவது தொடர்பாக உங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வை எல் எஸ் ஹமீட் என்னோடு இருந்தவர், அவ்வாறு நான் செய்தால் யாரை வைத்து செய்தேன் ? யாருக்கு சம்பளம் கொடுத்தேன் ? என்ற விபரம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமே? என்றீர்கள் . ஏன் பூமுதீன் என்பவரை வைத்து என்னுடைய பெயரில் ஹுனைஸ் பாரூக்கிற்கெதிராக அநாகரீகமாக நீங்கள் எழுதவில்லையா? அதை நான் மறுக்கவில்லையா? நாம் இருவரும் அது தொடர்பாக சண்டை பிடிக்கவில்லையா? பூமுதீன் உங்களிடம் சம்பளம் பெறுகின்ற ஊடகவியலாளர் இல்லையா?

அதன் பின் அதே பூமுதீனை வைத்து பத்து வேட்பாளர்களின் பெயரில் எனக்கெதிராக பொய்யான அறிக்கை விடவில்லையா? ( இன்ஷா அல்லாஹ் அந்த அறிக்கைக்கு பதில் தராமல் விட்டுவிடுவேனா?)

அதன்பின் இருபத்தையாயாரம் ரூபாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கியது தொடர்பாக குறித்த ஒருவருக்கெதிராக உங்களது அடியாள் ஒருவருக்கு எழுதச் சொல்லி உத்தரவு கொடுத்தது, தவறுதலாக வட்ஸ்அப்பில்  பதிவாகி நீங்கள் நாறியது உங்களுக்கு மறந்து விட்டதா? அடியாட்கள் வைத்து எழுதுவது உங்கள் தொழிலில்லையா? உங்களது அப்பாவி வேசத்தை எவ்வளவு காலத்திற்கு போடப்போகிறீர்கள். தொடர்ந்தும் தான் ஒரு மகா நடிகன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்களே?

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages