Header Ads

Breaking News

பிடல் காஸ்ட்ரோவின் இறுதி வரை நிறைவேற்றாத கனவுகள்



சர்வதேச வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பெற்றுள்ள கியூபா நாட்டின் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ தனது இறுதி நாள் வரை ஒரு முக்கியமான விடயத்தை நிறைவேற்ற முடியாமலேயே உயிரிழந்துள்ளார்.

உலக நாடுகளை ஒப்பிடுகையில் ஒரு நாட்டின் பிரதமராக 17 ஆண்டுகளும், ஜனாதிபதியாக 32 ஆண்டுகளும் பதவி வகித்து ஒரு நாட்டை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஒரே தலைவர் பிடல் காஸ்ட்ரோ என்றால் அது மிகையாகாது.
அமெரிக்காவின் கை அசைவின்படி தனது நாட்டு ஜனாதிபதிகள் தலையாட்டுவதை கண்ட பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒழிக்க புரட்சிப்படையை உருவாக்கினார்.
முதன் முதலாக அமெரிக்காவை ஒழித்துவிட்டு தன்னுடைய ஆட்சியை அவர் ஏற்படுத்தியபோது காஸ்ட்ரோவுக்கு வயது 32 தான்.

காஸ்ட்ரோவின் தலைமையில் ஆட்சி அமைத்த நாள் முதல் அச்சிறிய நாட்டின் முன்னேற்றத்திற்காக பல புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
நாடு முழுவதும் இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கியது மட்டுமில்லாமல், தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை அகற்றிவிட்டு அனைத்தையும் அரசு பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளால் மாற்றினார்.
இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து உலகில் சிறந்த மற்றும் தரமிக்க மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடு கியூபா என ஐ.நா புகழுமளவிற்கு தனது நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்றார்.

தனது ஆட்சியின் கீழ் காஸ்ட்ரோ நினைத்தது அனைத்தும் நடந்தது. ஆனால், அவரது முக்கிய கனவுகளில் ஒன்றான விபச்சார தொழிலை மட்டும் அவரால் இறுதி வரை தடை செய்ய முடியவில்லை.

காஸ்ட்ரோ ஆட்சியின்போது வீதி வீதியாக பாலியல் தொழிலாளிகள் நின்று வாடிக்கையாளர்களை அழைப்பது கண்டு பிடல் காஸ்ட்ரோ மிகவும் வருத்தப்பட்டார்.
இத்தொழிலை முடக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையும் என்பதாலும், இதனை ஒரு காரணமாக கொண்டு அமெரிக்க தனது நாட்டிற்குள் கலவரத்தை ஏற்படுத்தலாம் என காஸ்ட்ரோ தயங்கியுள்ளார்.

ஏனெனில், காஸ்ட்ரோ எப்போது கவனைக்குறைவாக இருப்பார்? அவரை எப்படி வீழ்த்தலாம் என அமெரிக்க உளவாளிகள் கண்ணில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு கவனித்து வந்துள்ளனர்.

ஆனால், பாலியல் தொழிலாளிகள் உள்பட எந்த பிரிவினரிடமும் கலவரத்தை ஏற்படுத்த விடாமல் காஸ்ட்ரோ திறமையாக ஆட்சி புரிந்து வந்துள்ளார்.
எனினும், பாலியல் தொழிலை அவரால் தடை செய்ய முடியவில்லை என்ற வருத்தம் இறுதி வரை அவருக்கு இருந்துள்ளது.
இது குறித்து பிடல் ஒரு ஆவணப்படத்தில் பேசியபோது, ‘கியூபாவின் புரட்சியானது ஒவ்வொரு சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.
எங்கள் நாட்டு பாலியல் தொழிலாளிகள் அனைவரும் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்கள்’ என காஸ்ட்ரோ பெருமைப்பட கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments