Comments System

header ads

பொறிக்குள் யார் ? ஹசன் அலியா, ரவூப் ஹக்கீமா



(இப்றாஹிம் மன்சூர்)


ஹசனலியின் பொறியில் அகப்பட்டுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம் தேசியப்பட்டியல் விவகாரத்தில் ஹசனலியை அட்டாளைச்சேனை மக்களிடம் அகப்படச் செய்து தப்பிக்க முயற்சிப்பதாக அறிய முடிகிறது.
அமைச்சர் ஹக்கீம் ஹசனலிக்கு  தேசியப்பட்டியல் வழங்குவதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் மு.கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பின்னால் செல்லக் கூடிய நிலை இருந்ததை மைத்திரியின் பின்னால் வரச் செய்ததன் பிரதான பங்கு ஹசனலிக்குள்ளது.இவர் தலைமையில் மைத்திரி அணியை ஆதரிக்க சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று மு.காவில் உள்ளவர்களில் கிழக்கு மாகாணத்தின் தேவைகளை துணிந்து பேசக்கூடியவராக ஹசனலியை சிறிதேனும் சந்தேகமின்றி சுட்டிக்காட்டலாம்.அமைச்சர் ஹக்கீம் கிழக்கு மக்களின் தேவைகளான கரையோர மாவட்டம்,தென் கிழக்கு அலகு பற்றி பேசியதை யாராவது கேள்விப்பட்டதுண்டா? ஹசனலி அடிக்கடி இது பற்றி கதைத்துவருகின்றமை உலகறிந்த உண்மை.இந்த பேச்சுக்கள் விடுபடாது ஒலிக்க வேண்டுமென்றால் ஹசனலிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்தில்லை.

இன்றுள்ள மு.காவினர்களில் முஸ்லிம்களின் பிரச்சினையை நன்கு அறிந்து வைத்திருக்கும் மூத்தவர்களில் ஒருவராகவும் ஹசனலியை குறிப்பிடலாம்.இப்படி மு.காவின் தேசியப்படியலை ஹசனலிக்கு வழங்க பல நியாயங்களை கூறலாம்.
அப்படியானால் அட்டாளைச்சேனைக்கு என்ன செய்வது?

அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு எவ்வாறு தேசியப்பட்டியல் தருவதாக வாக்குறுதி அளித்தாரோ அவ்வாறே ஹசனலிக்கும் வழங்கியிருந்தார்.இதனடிப்படையில் பார்க்கும் போது இம்முறை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விடுவது எவ்வளவு துரோகமான செயலோ அதே கனதியான துரோகமே ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்காமல் விடுவதுமாகும்.
அமைச்சர் ஹக்கீம் தேர்தலுக்கு முன்பு திருகோணமலைக்கு  எவ்விதமான தேசியப்பட்டியல் வாக்குறுதியும் வழங்கவில்லை.அவர்கள் மு.காவிற்கு வாக்களிக்காததன் காரணமாகவே தோல்வியையும்  சந்தித்தனர்.ஒரு பிரதியமைச்சை வழங்கியும் மு.காவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோல்வியையே  சந்தித்திருந்தார்.இப்படியானவரை சாதாரண பாராளுமன்ற உறுப்பினாக வைத்திருப்பதன் மூலம் திருகோண்மலை மாவட்டத்தில் மு.காவை நிமிர்த்த முடியாதென்பது வெளிப்படையான விடயம்.
அதாவது தௌபீக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை இராஜினாமா செய்வித்து அட்டாளைச்சேனைக்கு வழங்குவதே இதற்குள்ள ஒரே ஒரு பொருத்தமான தீர்வாகும்.அமைச்சர் ஹக்கீம் தற்காலிகமாக சல்மானுக்கு வழங்கிய தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனைக்கு வழங்கியிருந்தாலும் சுழற்சி முறையினை சாதகப்படுத்திருக்கலாம்.

தற்போது தேசியப்பட்டியல் பதினைந்து மாதங்களை கடந்து விட்டதால் சுழற்சி முறையையும் சாதகமாக்குவதில் இடர்பாடுள்ளது.இதனை பொறுப்பேற்க வேண்டியவர் அமைச்சர் ஹக்கீமே தவிர ஹசனலியல்ல.அட்டாளைச்சேனை மக்களுக்கு தேசியப்பட்டியல் கோர எந்தளவு உரிமை உள்ளதோ அந்தளவு உரிமை ஹசனலிக்கும் உண்டு.

தற்போது கூட அமைச்சர் ஹக்கீம் நினைத்தால் அவரிடமுள்ள தேசியப்பட்டியலை ஹசனலிக்கு வழங்காமல் அட்டாளைச்சேனைக்கு வழங்க முடியும்.தேசியப்பட்டியல் வழங்கும் முடிவும் ஆற்றலும் அவரிடமே உள்ளது.அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலை வழங்காமல் ஹசனலிக்கு வழங்கினால் அதற்கு அவரது செயற்பாடுகளே காரணம் என்பது யாவரும் அறிந்ததே!

எனவே,இம் முறை அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் அமைச்சர் ஹக்கீமே! தற்போது அமைச்சர் ஹக்கீம் அட்டாளைச்சேனை மக்களிடமிருந்து,தான் தப்பித்கொள்வதற்காக ஹசனலியின் மீது மக்கள்  பார்வையை திருப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.இதனை மக்கள் கவனமாக அவதானித்து நிதானித்து கையாள வேண்டும்.






Post a Comment

0 Comments