Header Ads

Breaking News

கர்ப்பப் பைப் புற்றுநோய்: வெங்காயம் குணப்படுத்தும்! -ஜப்பான் ஆய்வு



டோக்கியோ, 

கர்ப்பப் பையில் ஏற்படுத்தும் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கு வெங்காயம் உதவும் என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வெங்காயம் ஒரு சிறந்த இயற்கை மருத்துவப் பொருள் என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் முதன் முறையாக அது புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படக்கூடியது எனத் தெரியவந்துள்ளது.

தற்போது கர்ப்பப் பைப் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையை வெங்காயம் கொண்டுள்ளது. ஜப்பானில் உள்ள குமாமோடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் வெங்காயத்தில் உள்ள ஒளியோகனின்-ஏ (ஒ.என்.ஏ.) என்ற மூலப்பொருள், கர்ப்பப் பைப் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை பெற்றிருக்கிறது எனக் கண்டறிந்துள்ளனர்.
எனவே, கர்ப்பப் பைப் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் வெங்காயத்திற்கு இருப்பதால், வெங்காயத்தில் உள்ள ‘ஒனியோகின்-ஏ’ (ஒ.என்.ஏ.) மூலப் பொருளை இந்த வகைப் புற்றுநோய் மாத்திரைகளில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

No comments