About Me

header ads

தமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி என்ன?; கம்மன்பில கேள்வி



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் என்னவென்பதை அறிவிக்க வேண்டுமென மஹிந்த சார்பு கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த உறுதிமொழி்கள் தொடர்பில் நாட்டின் பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் அறிந்திருப்பதாகவும் வலியுறுத்தினார்.

உதய கம்மன்பில “நாடாளுமன்றில் கடந்த 10ஆம் திகதி உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அந்த வாக்குறுதிகள் என்னவென நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன் .எனினும் அவர் அதனை கூறவில்லை. 

அதேவேளை கடந்த 19ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கூறுகிறார்களே தவிர அந்த வாக்குறுதிகள் என்னவென கூறுகிறார்கள் இல்லை. 

அரசாங்கம் வழங்கிய அந்த வாக்குறுதிகள் என்னவென தெரிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்கு காணப்படுகின்றது. சர்வதேசம், இந்தியா மற்றும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகள்  என்னவென   ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்கின்றது. எனினும் புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியேருக்கு  இந்த  வாக்குறுதிகள்  என்னவென  கட்டாயம் தெரிந்திருக்கும். ஆகவே அதனை புதுவருடத்திற்கு முன்னர் வெளிப்படுத்துமாறு பிரதமரிடம்  வேண்டுகோள்  விடுக்கின்றோம்.“

கடந்த 19ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நநடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வட மாகாண முதலமைச்சரும், பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் அக்கறைகாட்டவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்ததும், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகள், அதேபோல் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்படும் நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகள் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் வட மாகாண முதலைமைச்சர் நினைவூட்டயிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments