About Me

header ads

திருக்கோயிலில் இராணுவத்துடன் இயக்க போராளி அடாவடி



கோபிகாந்த்

திருக்கோயில் கஞ்சிகுடிச்சாறு பிரதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உரித்தான காணிகளை முன்னால் போராளி ஒருவர் அண்மைக்காலமாக இராணுவத்திற்கு விற்பனை செய்து வயிறு வளர்த்து வருகின்றார் என அங்குள்ள தமிழர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அங்குள்ள தமிழர்கள் இதுபற்றி விபரிக்கையில்….
அன்று தமிழ்த்தேசியத்தினை பெற்றுக்கொடுப்பதற்காக போராட்டத்தில் குதித்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் ஒரு சில துரோகிகளின் வரிசையில் இங்குள்ள முன்னால் போராளியான தங்கராசா(காண்டா) என்று அழைக்கப்படும் நபர் இன்று இராணுவத்துடன் சேர்ந்து இங்கு தமிழர்களுடைய காணிகளை விற்று சிங்கள இராணுவத்திடம் வயிறு வளர்த்து வருகின்றார்.
அன்று வீரம் செறிந்த இடமாக விளங்கிய இந்த கஞ்சிகுடிச்சாறு பகுதி தமிழர்களின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமென்பது இந்த துரோகிக்கு தெரியாதா? இவ்வாரான ஒரு சில துரோகிகளின் வேலையினால் ஒட்டு மொத்த முன்னால் போராளிகளுக்கும் கலங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் இவரது செயற்பாடு அமைந்து காணப்படுகின்றது.
இவர் தன்னுடைய காணியையும் விற்று அவருக்கு அருகில் உள்ள இரண்டு தமிழர்களது காணிகளையும் சிங்கள இராணுவத்திற்கு விற்றதுடன் மேலும் பல காணிகளை விற்பதற்கான முயற்சிகளையும் செய்து வருகின்றார்.
இவர் இவ்வாறு சிங்கள இராணுவத்திற்கு தமிழர் காணிகளை விற்றுக்கொடுப்பதனால் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்தினையும் பெற்று அவருக்கான வீடும் கட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments