About Me

header ads

ரிஷாத்தின் ஊழலை ரவூப் ஹகீம் நிரூபிக்கவில்லைஅரசியலை பொருத்தவரை ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்கு போட்டியாகவுள்ள அரசியல்வாதியை விமர்சிப்பது வழமையானதே. எனினும் கடந்த 2015.01.08 ல் நிறுவப்பட்ட நல்லாட்சி அரசினால் உருவாக்கப்பட்டு ஊழலை விசாரிப்பதற்காக FCID பொலிஸ் பிரிவும் நிறுவப்பட்டது. இதன் பின் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த ஊடகங்களும், முகநூல்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வணிப, கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

கடந்த 11.12.2016ம் திகதி இடம்பெற்ற அதிர்வு நிகழ்வில் புத்தளம் நகரில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றிய காணொளி ஒன்று காண்பிக்கப்பட்டது. இதில் அமைச்சர் ஹக்கீம் பொதுக் கூட்டமொன்றில் அமைச்சர் றிஷாட் மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். வன்னியில் போட்ட வீதிகளையும், குளத்தையும் காணாமல் கணக்காய்வாளர் திணைக்களம் தேடுவதாகவும், பித்தளை இறக்குமதியில் ஊழல் நடாந்திருப்பதாகவும் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து அமைச்சர் ஹக்கீம் உரையாற்றினார்.

இது தொடர்பில் அந் நிகழ்வில் கருத்து தெரிவித்த அமைச்சர் றிஷாட் அவர்கள், தேர்தல் காலத்தில் குர்ஆன், ஹதீ ஸை வைத்து மர்ஹ_ம் அஸ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட கட்சியின் தலைவர் கேவலம் ஒரு சினமா பட நகைச்சுவை நடிகரை வைத்து அதன் கதையை சொல்லி ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவது கவலையளிப்பதாகவும்,இக்காட்சியின் தற்போதைய நிலை இவ்வாறுதான் உள்ளதாகவும், இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுகளை இயலுமென்றால் ஒன்றையாவது நிரூபித்து காட்டுமாறும் பகிரங்க சவால் விடுத்தார். இதற்கு முன்னரும் கடந்த பொதுத்தேர்தல் நேரத்தில் என்கெதிராக முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினரான றிஸ்வி ஜவஹர்ஸா என்பவர் பகிரங்கமாக ஊடகவியலாளர் மாநாடு நடாத்தி 13 குற்றச்சாட்டுக்களை 3 இடங்களில் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் நான் கூறியிருந்தேன் இது தொடர்பில் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் கோரி இருந்தேன் எனினும் எந்தவிதமான குற்றசாட்டும் இன்iமையால் அது தொடர்பில் எந்தவிதமான விசாரனைகளும் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து 18.12.2016ம் திகதிய அதிர்வு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அமைச்சர் ஹக்கீமின் வரவானது அமைச்சர் றிஷாட் மீதான ஊழலை நிரூபிக்க வந்திருக்கிறார் என்றே அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும் தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வாய் திறக்காத அமைச்சர் ஹக்கீம் அவர்கள் பித்தளை இறக்குமதி தொடர்பில் நிரூபிக்க சென்று தன் இயலாமையை வெளிப்படுத்தினார். மக்களின் எதிர்பார்ப்பு எவ்வாறு இருந்ததெனின் அமைச்சர் ஹக்கீம் எந்த அமைச்சின் கூடாக காசு இவ்வளவு ஒதுக்கப்பட்டது? குறிப்பிட்ட இந்த குளத்திற்கு ஒதுக்கப்பட்டது? அந்த குளம் இப்போது இல்லை என காகிதாதிகள், போட்டோ மூலம் ஆதரமாக நிரூபிப்பார் என்றே மக்களின் எதிர்பார்ப்பு இருந்தது.

எனினும் இது தொடர்பில் வாய்திறக்காத அமைச்சர் ஹக்கீம் பித்தாளை இறக்குமதி தொடர்பில் மட்டும் சில விடயங்களை மறைத்து கூற முற்பட்டு அதிலும் மூக்குடைந்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
 இது தொடர்பில் ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்திகளின் படி, அமைச்சர் றிஷாட்டினால் பித்தளை இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்பிக்கப்பட்ட பொழுது அதனை அமைச்சர் ஹக்கீம் எதிர்த்துள்ளார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி அமைச்சரவை உப குழுவொன்றை பின்வரும் அமைச்சர்களை கொண்டதாக நியமித்தார். அமைச்சர் றிஷாட்(தலைவர்), அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, அமைச்சர் ரவூப் ஹக்கீம்,சரத் அமுனுகம, ரவி கருணாநயக்க, எஸ். பி திஸாநாயக்க ஆகியோர் இக் குழுவில் அங்கம் வகித்தனர்.

இக்குழு இது தொடர்பில் ஆராய்ந்ததுடன், பித்தளை சிறு கைத்தொழிலாளர்களையும் பாராளுமன்ற கட்டிட தொகுதிக்கு அழைத்து அவர்களின் கருத்தையும் கேட்டறிந்ததுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனையவர்கள் இத்திட்டம் சிறு பித்தளை தொழிலாளர்களுக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்க கூடியது என கையொப்பமிட்டனர். தான் ஊழல் என்று நினைத்ததால் அதனை பகிரங்கமாக மக்களுக்கு கூறி மக்களை பிழையாக வழிநடாத்த எத்தணிப்பது நகைப்புக்குரியதே.

இதன் மூலம் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அமைச்சர் றிஷாட் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்தது இல்லாமல், ஆதாரத்துடன் நிரூபிப்பார் என்று நம்பி இருந்த போராளிகளையும் அதிர்வு மூலம் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
முஹம்மட் றிஸ்வி
ஓட்டமாவடி

Post a Comment

0 Comments