About Me

header ads

அட்டாளைச்சேனை மக்கள் இனியும் ஆத்திரப்படமாட்டர்கள்; முடிவெடுப்பார்கள் ; ஹக்கீமால் ஏமாற்ற முடியாது
ஏ.பீ.அன்வர்
நூலக உதவியாளர்
அட்டாளைச்சேனை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை விதைத்து வளர்த்து வருபவர்களில் அட்டாளைச்சேனையும் ஒன்றாகும் அதிலும் அட்டாளைச்சேனைக்கு ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது கட்சியின் இதயம் என்ற பெயர் கட்சிக்காக பல தியாகங்களை செய்து கட்சியை வளர்த்திருக்கிறார்கள்.

கட்சியின் ஸ்தாபக தலைவர் மாமனிதர் மர்ஹூம் MHM அஸ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பிக்கும்போது எல்லபாப் பகுதிகளிலும் சவால்களுக்கு முகம்கொடுத்தார்கள். ஆனால் அட்டாளைச்சேனையில மாத்திரம் கட்சிக்கு தாக்குபிடிக்க முடியாதளவுக்கு சவால்கள் தொட்ர்ந்தன.
Dr ஜலால்டீன் MP அவர்கள் பிறந்த மண் ஒரு தனிக்காட்டு ராஜாவாக பொத்துவில் தொகுதியையே ஆட்டிப்படைத்த காலம் அது பாராளுமன்ற உறுப்பினர் Dr மர்ஹூம் ஜலால்டீன் அவர்கள் தனது மண்ணுக்காக தொழில் வாய்ப்பென்றும் அபிவிருத்தி என்றும் ஏகப்பட்ட சேவை செய்து கொண்டிருந்தார் .
சர்வாதிகார தலைவராக பார்க்கப்பட்டவரும், எந்த அரசியல்வாதியும் அவர் முன்னால் பேசுவதற்குக்கூட தயங்கிய இரும்பு மனிதரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவையே தொலைபேசியில் அழைத்து தனது மக்களின் கோரிக்கையை வென்று காட்டியவர்தான் அட்டாளைச்சேனை மண் பெற்றடுத்த அருந்தவப் புதல்வன் ஜலால்தீனாகும்.

இவரையும் புரந்தள்ளி சமுகத்துக்கான பயனத்தில் இணைந்தோம் சவால்களை எதிர் கொன்டோம். ஊரில் உள்ள அனைத்து செல்வந்தர்களும் மெரும்பான்மை கட்சியோடு இணைந்தே இருந்தனர். இவர்களை எல்லாம் எதிர்த்து அவர்களின் செல்வங்களுக்கோ பதவிகளுக்கோ சோரம்போகாமல் அவர்களின் அடாவடிகளை அரசியல் அதிகாரத்தைகொண்டு முற்று முழுதாக எங்கள் மீது திணித்தார்கள் அதையும் தாண்டி கட்சிக்கு உரமூட்டி வளர்தெடுத்தவர்கள் அட்டாளைச்சேனை மக்கள்.
இவர்களின் போராட்ட வடிவமே போராளி என்ற சொல்லை தலைவர் அவர்கள் போராளி என்று விழிப்பதற்கு காரனமானவர்கள் அப்படியான மக்களை தலைவர் ஹக்கீம் அவர்கள் எப்படி எல்லாம் சாக்குப்போக்கு சொல்லி தேசிய பட்டியல் MP தருவதாக வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளை உலாமாக்களிடமும் புத்தி ஜீவிகளிடமும் வழங்காத நாட்களே இல்லை.
ஆனால் தொலைக்காட்சி அதிர்வு நிகழ்ச்சியில் அவரின் கலர்மாறியது,  அவர் அட்டாளைச்சேனையில் வைத்த பற்று அதிர்வில் கலைந்தது இனி விடயத்துக்கு வருவோம்.

அட்டாளைச்சேனை மக்கள். கல்வியால் உயர்ந்தவர்கள் பட்டங்களையும் பதவிகளையும் அதிகம் சுமப்பவர்கள் கல்வி நிருவனங்களையும் மார்க்கக் கல்வி மத்ரஸாக்களையும் உருவாக்கி போதித்து கல்வியை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்கிறவர்கள்.
அட்டாளைச்சேனை என்றால் கல்வியாளர்கள் தான் என்பது மிகையாகாது அது மாத்திரமா 1978 ம் ஆண்டு அட்டாளைச்சேனை ஊரானது பாராளுமன்ற உறுப்பினரையும் பெற்றது. எந்த மூலை முடுக்கிலும் அட்டாளைச்சேனை புகளோடுதான் இருக்கின்றது. தலைவர் ரவுப் ஹக்கீம் ஊரை ஏழனப்படுதுவதோ எடைபோடுவதோ பொருத்தமற்றதாகும்.
உங்களை பொறுத்தவரை அட்டாளைசேனை மக்கள் சுய நல மற்றவர்கள் ஏன் என்றால் அவர்கள் கட்சிக்கு மாத்திரம்தான் வாக்களிப்பவர்கள் ஆனால் தலைவரோ பொது நலம் உள்ளவர் அப்பொழுது ஏன் எங்களுக்கு தரவேண்டிய தேசியப் பட்டியலை தர மறுக்குகிறீர்கள்.
அப்படி என்றால் நீங்கள் சுயநலக்காரராய் இருக்கவேண்டும் அட்டாளைச்சேனை MP கழுதை நரி சிங்கத்தின் கதையல்ல இது வரலாற்றில் பொறிக்கப்படும் இந்த வரலாற்றுத்தவரை தலைவர் அவர்கள் ஏற்படுத்த எத்தனிக்கவேன்டாம்.

Post a Comment

0 Comments