Comments System

header ads

தலைமை செயலாளரே காலி..! தலைமை செய்தி ஆசிரியர்களுக்கு ஆப்பு வைக்கப்படுமா?



தலைமை செயலாளரே காலி..! தலைமை செய்தி ஆசிரியர்களின் ஆட்டம் அடக்கப்படுமா? தீபா பேட்டியை மையப்படுத்தி கிளம்பும் சர்ச்சை!!
தலைமை செயலாளரே காலி, அடுத்து தலைமை செய்தி ஆசிரியர்களின் ஆட்டம் அடக்கப்படுமா என்கிற ரீதியிலான கட்டுரைகள் தமிழகத்தில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றன.
கதை களம் திருச்சியில் துவங்குகிறது…!
அதிமுகவின் முக்கிய பிரமுகர் சசிக்கு எதிராக என்ன செய்தால் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் என யோசிக்கையில், தந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியரின் தொடர்பு கிடைக்கிறது, பேரம் பேசுகிறார்.
அது கோடிகளில் பேசப்ப ட்ட பெரிய பேரம். நிராகரிக்க மனமில்லை. சேனலிலோ உரிமையாளரின் தலையீடு அவ்வளவாக இல்லை.
ஏற்கனவே, சேனலை ஜெயா டிவியின் மறு அவதாரமாகவே பார்க்கப்படும் பிம்பத்தையும் உடைக்க, இந்த யுக்தி பயன்படும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் என்று கணக்கு போடுகிறார் தலைமை செய்தி ஆசிரியர்.
டீசர் போடப்படுகிறது. அலறுகிறது கார்டன். சித்தப்பூ களத்தில் குதிக்கிறார்.இதுமாதிரியான எதிர்ப்புகள் வரும் என்று முன்பே பேரம் பேசப்பட்டபோதே முடிவான ஒன்றுதான்.
மற்ற சேனல்களில் இவரைப்போன்றே தலைமை செய்தி ஆசிரியர்களாக இருக்கும் பிரபலமானவர்கள் இருவர் இதற்காக களத்தில் இறக்குகிறார் சித்தப்பூ.இரகசிய கூட்டம் கூட்டப்படுகிறது.
டீசர் போடப்பட்டதால் நிகழ்ச்சியை இரத்து செய்யமுடியாது என ஆரம்பித்த பேச்சு பின்னர் டீல் முடிந்து முழு நிகழ்ச்சியையும் சித்தப்பூக்கு போட்டு காண்பிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சியை அப்படியே எடிட் செய்து மொக்கை பேட்டியாக உருவாக்கப்படுகிறது.
நிகழ்ச்சி ஒளிபரப்புவதாக சொன்ன தினத்தில் முதன் முறையாக , பெரும் பரபரப்பை ஏற்படுத்தும், அரசியல் பிரவேசத்தை பற்றி இந்த நிகழ்ச்சி ஆவலை தூண்டும் என எதிர்பார்க்கபட்ட ஒரு நிகழ்ச்சி அப்படியே சொன்ன தேதியில் ஒளிபரப்பாகாமல்.
பின்னர் ஆறின கஞ்சி போல உப்புசப்பில்லாமல் போனது.
மறுநாள் தீபக்கின் பேட்டியும் ஒளிபரப்பினால் நட்ட நடு செண்டர் என நிரூபித்துவிடலாம் என்று முடிவாகிறது.
இரண்டு பக்கமும் கல்லா கட்டிய தலைமை செய்தி ஆசிரியரின் அரும்பணியை பாராட்டி விரைவில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
தலைமை செயலரே ஆட்டம் காணும் வேளையில் தலைமை செய்தி ஆசிரியர்களின் ஆட்டமும் இனி அடங்கும் என எதிர்பார்க்கலாம்.
என்று நீள்கிறது அந்த தமிழக செய்திகள் தெரிவிக்கின்றது…..

Post a Comment

0 Comments