About Me

header ads

ஜே.வீ.பீ எச்சரிக்கை - மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓடும்!



உள்ளூராட்சி தேர்தல் புதிய தேர்தல் முறையில் நடத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென மக்கள் விடுதலை முன்னணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஆயுட்காலம் முடிவடைந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டபோதும், தேர்தலை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சரோ அரசாங்கமோ தயாரில்லை.
உள்ளுராட்சி சபைகளை உருவாக்க தயாரிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையானது இரு பிரதான கட்சிகளுக்கு சாதகமாகவும், ஏனைய கட்சிகளை விரட்டியடிக்கும் முகமாகவும் அமைந்துள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமைக்கு எல்லை நிர்ணய பிரச்சினை காரணமல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்வீட்டு பிரச்சினை தீர்க்கப்படும் வரை தேர்தல் நடைபெறப் போவதில்லை.
புதிய தேர்தல் முறையின் பிரகாரம், ஒரு கட்சியிலிருந்து 5000 பேர் போட்டியிடலாம். ஒவ்வொருவருக்கும் தலா 5000 ரூபா பிணைப் பணம் செலுத்த வேண்டும். அப்படியாயின் ஒவ்வொரு கட்சியும் தமது உறுப்பினர்களுக்காக 250 இலட்சம் ரூபாவை பிணைப்பணமாக செலுத்த வேண்டும். சிறிய கட்சிகளுக்கு இது எவ்வாறு சாத்தியமாகும்?
இந்நிலையில், புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டார் இந்த நாட்டில் மீண்டும் இரத்தம் சிந்தும் நிலை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.
எனவேதான் எல்லை நிர்ணய பிரச்சினை மற்றும் சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் பாதிப்பு என்பவற்றை தவிர்க்க பழைய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துமாறு கோருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments