அட்டாளைச்சேனைக்கான அரசியல் அதிகாரம் அவசியம் வழங்கப்பட வேண்டும். - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 27, 2016

அட்டாளைச்சேனைக்கான அரசியல் அதிகாரம் அவசியம் வழங்கப்பட வேண்டும்.- சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் -
அட்டாளைச்சேனைக்கு  அரசியல் அதிகாரம் கொண்ட தேசிய பட்டடியல் பாராளுமன்ற உறுப்பினருக்கான நியமனத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கட்டாயம் இன்னும் காலதாமதமின்றி உடனடியாக வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார். அக்கட்சியின் ஸ்தாபகபொதுச் செயலாளரும் உயர் பீட அரசியல் விவகார பணிப்பாளருமான சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள்.
அண்மையில் அரச தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி ஷஷஇன்றைய சமகால அரசியல் விவகாரங்கள்|| பற்றி இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையில்தான் மேற்கண்டவாறு தனது கருத்தை மிகவும் ஆழமாகவும் ஆணித்தரமாகவும்ää ஆதாரபூர்வமாகவும் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் 1980 அண்டு ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு அக்கட்சியின் ஆரம்பப் பொதுச் செயலாளராக இருந்து இப்பகுதியில் தான் முதன் முதலாக அக்கட்சியை அறிமுகம் படுத்தியவன் என்ற வகையில் மட்டுமல்ல எனது ஊர் மக்கள் அன்று தொட்டு இன்றுவரையும் முழுமையாக முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் ஆதரவாளர்ளாக ஆதரவு தெரிவித்து வந்துள்ளார்கள் என்ற உண்மை எல்லோரு அறிந்த வரலாறு என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
இதற்கு பிரதி உபகாரமாக தலைமைத்துவம் இது தொடர்பாக பல இடங்களிலும் பொது மேடைகளிலும் பகிரங்கமாக வாக்கு அளித்ததன் பிரகாரம் இம்முறையாவது இத் தேசிய பட்டியல் நியமனத்தை இவ்வூருக்கு வழங்க வேண்டும் என எல்லோரும் மிகவும் ஆவலாத எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டத்தரணி கபூர் அவர்கள் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது மு.கா வின் முதல் தேசிய பட்டியலில் 1989 ஆண்டு முதல் முதலாவது இடத்தில் இருந்து இன்று வரையும் இறுதியாக வந்த எமது கட்சியின் பட்டியலிலும் தனது பெயர் தொடர்ந்து பலமுறை இடம் பெற்று வந்துள்ளதாகவும் அதனை தனக்கு இன்னும் வழங்காமையிட்டு தனது வறுத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இக்கட்சியை 1980 ஆண்டு ஆரம்பித்து அதற்கான ஆரம்ப வேலைத்திட்டங்களை நாம் வகுத்து இதற்கான இப் பெயரையும் தெரிவு செய்து அதனை மறைந்த தலைவர் எம்.எச்.எம். அ~;ரப் அவர்களுடன் இணைந்து செயற்பட்டு அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிந்து நாடு பூராகவும் இக்கட்சியை எடுத்துச் சென்றவர்கள் நாங்கள் தான்  என்ற உண்மையை இந்நிகழச்சியின் மூலம் ஊருக்கும் உலகத்திற்கு எடுத்துரைக்க விரும்புவதாகவும் மேலும் தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages