About Me

header ads

அமைச்சர் விஜேதாச முஸ்லிம் அமைச்சர்களுக்கு இன்று சபையில் சுடச்சுடப் பதில்



கடந்த அரசாங்க காலத்தில் அளுத்கம பிரச்சினை இடம்பெற்ற போது எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் பாராளுமன்றத்தில் அதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவில்லை. நானும், லக்ஷ்மன் கிரியெல்ல அமைச்சரும் மாத்திரமே அதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம் என நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மத விவகார அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

முஸ்லிம் அமைச்சர்களுக்கு இன, மத பிரச்சினைகள்  ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படின் எந்தவொரு மோஷமான வேலையையும் கண்டும் காணாது இருந்து விடுவார்கள்.
கடந்த அரசாங்கத்தில் இனவாதப் பிரச்சினைகளை உருவாக்கிய, முஸ்லிம் அமைச்சர்களுக்கு அன்று தலைமை வகித்தவருக்கு ( மஹிந்த ராஜபக்ஷவுக்கு)  எதிராக அப்போது ஒரு வார்த்தையாவது பேச முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் முன்வரவில்லை.

கடந்த அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட மோஷமான சமூகத்தைத் தான் தற்பொழுது நாம் நன்னெறிப்படுத்த முயற்சிக்கின்றோம். கடந்த அரசாங்கத்தில் அனைத்தையும் செய்துவிட்டு தற்பொழுது இந்த அரசாங்கம் என்ன செய்தது என்று விரல் நீட்ட வர வேண்டாம் எனவும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவிடம் பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் விஜேதாச கேட்டுக் கொண்டார். (மு)

Post a Comment

0 Comments