About Me

header ads

ஒற்றையாட்சியை நாசமாக்க ஒருபோதும் இடமளியோம்! – சூளுரைக்கின்றது மஹிந்த அணி



புதிய அரசமைப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பரிசீலனை செய்து ஒற்றையாட்சியை நாசமாக்க அரசு முற்படுமாயின் அதற்கு எதிராக பொது எதிரணி, மக்கள் சக்தியைத் திரட்டி பாரிய எதிர்ப்பைத் தெரிவிக்கும். அதிவேளை, அரசமைப்பை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கவும் மாட்டாது.”
– இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
புதிய அரசமைப்புத் தொடர்பில் பொது எதிரணி எவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளது என்று  கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கணடவாறு கூறினார்.
 அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொண்டுவரப்படும் என்று அரசு  உத்தேசித்துள்ள புதிய அரசமைப்புத் தொடர்பில் அரசுக்குள் இதுவரை உறுதியான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வைக் கொடுப்பதற்குத் தயாராகவே உள்ளது. ஐ.தே.கவினர் விடுதலைப்புலிகளுடனும் இதனையே அன்று பேரம் பேசியிருந்தனர்.
ஆனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒற்றையாட்சியின் அடிப்படையிலேயே தீர்வுத் தொடர்பில் அன்றுமுதல் வலியுறுத்தி வந்துள்ளது. தற்போதைய சூழலிலும் சு.க. எவ்வாறான முறையில் தீர்வை வழங்குவது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது.
எவ்வாறாயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சக்தியைக் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைய சமஷ்டி முறையிலான அரசமைப்பை அரசு கொண்டுவர முயற்சித்தால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். அதேவேளை, ஒற்றையாட்சியை நாசமாக்க நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” – என்றார்.

Post a Comment

0 Comments