சட்டப்பிரகாரம் அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஹிலாரி, நடக்குமா..? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 4, 2016

சட்டப்பிரகாரம் அமெரிக்க ஜனாதிபதியாகிறார் ஹிலாரி, நடக்குமா..?அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை விடஅதிகளவு மக்கள் வாக்குகளைப் பெற்ற ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் ஹிலாரி கிளின்டன் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் வாக்குகள் அடிப்படையில் ட்ரம்பை விட 2.5 மில்லியன் வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.
ஆனால் மாகாண ரீதியான வாக்களிக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியைத் திரும்பப் பெற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்கு ஹிலாரி கிளின்டனை அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கையெழுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதாவது அமெரிக்க வரலாற்றில் இதுவரை இதுபோன்று கையெழுத்துப் போராட்டத்தில் யாரும் ஈடுபட்டதில்லை.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை தொடங்கிய சமூக ஆர்வலரான டேனியல் பிறெசென்சர் என்பவர் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற உள்ள வாயப்புகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேர்தல் விதிமுறைகளில் அதிக மக்கள் வாக்கு எண்ணிக்கை பெற்றவர் ஜனாதிபதி ஆவார் என வகுக்கப்பட்டிருந்தால் தற்போது ஹிலாரி தான் ஜனாதிபதி.
ஆனால் தேர்தல் விதிமுறைகள் மாகாண வாக்குகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தற்போது டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாக ஓர் வாய்ப்பு உள்ளது. அதாவது பொதுமக்கள் வாக்குகளை தொடர்ந்து ஒருவர் உடனடியாக ஜனாதிபதியாக முடியாது.
இதன் அடுத்தகட்டமாக ஒவ்வொரு மாகாணத்தில் உள்ள தேர்தல் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை இறுதியாக பதிவு செய்ய வேண்டும.
பெரும்பாலும் இந்த உறுப்பினர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு தான் வாக்களிப்பார்கள். ஆனால் தங்களுடைய விருப்பத்தை மாற்றிக்கொண்டு மாற்று வேட்பாளருக்கும் இவர்கள் வாக்களிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு இந்தத் தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களித்தால் அவர் நிச்சயமாக ஜனாதிபதியாக சட்டபூர்வமாகவே தெரிவு செய்யப்படுவார்.
தற்போது இந்த உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் நாங்கள் வைத்துள்ளோம்.
இதுபோன்ற நடவடிக்கை அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் நடந்ததில்லை. ஆனால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு எதிராக இதுபோன்ற கடுமையான போராட்டங்களும் முன்னர் நடந்ததில்லை.
எனவே இவற்றை கருத்தில் கொண்டு மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் ஹிலாரி கிளின்டனுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய கோரிக்கையாகும் என டேனியல் பிறெசென்சர் விளக்கமளித்துள்ளார்.
தற்போது வரை ட்ரம்பிற்கு எதிரான சுமார் 50 லட்சம் பேர் வரை கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்வரும் 19ம் திகதி மாகாண தேர்தல் அமைப்பு உறுப்பினர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யவுள்ளதால் அதன் முடிவுகள் ட்ரம்பின் வெற்றியை முறியடிக்குமா என பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages