Header Ads

Breaking News

அக்கரைப்பற்று விவசாயிகளிடம் பெரும்பான்மை ஊடகங்கள் சில்மிஷம்



அக்கரைப்பற்று பிரதேசத்திட்குட்பட்ட வட்டமடு விவசாயிகளின் காணி தொடர்பிலான விவகாரம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் புதுவட்டை கண்டம், வட்டமடு கண்டம், கொக்குழுவா, வேப்ப யடி கண்டம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 1800  ஏக்கர்  விவசாயக்கனிகளில் முஸ்லீம் விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டு வருகின்றது.


இது  தொடர்பிலான  பத்திரிகையாளர்  மாநாடு  இன்று 04 .12 .2016  காலை  9. 30 மணிக்கு  ஆசியான்  செப்  ஹோட்டலில்  இடம் பெற்றது.  MIM அதீர் பொருளாளர் வட்டமடு  சம்மேளனம்,  M. ராசிக் செயலாளர் வட்டமடு  விவசாயிகள்  சம்மேளனம் ஆகியோர்  கருத்து  தெரிவிக்கையில்  "கடந்த வாரம் காணிகளுக்குள் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் போது பாயிஸ் என்ற விவசாயி தாக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்கிய நபர் தற்போது விளக்கமறியலில் தற்போதும் உள்ளார் .

இந்நிலையில் தமிழ் தேசிய பத்திரிகை ஓன்று உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு, ஏழை விசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர். அதே போன்று சகோதர மொழி ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் தன்னை ஜனாதிபதியின் காரியாலய  ஊழியராக அடையாளம் காட்டி மக்களை அச்சுறுத்தியுள்ளார். உண்மை நிலையை அடையாளம் காட்ட வேண்டிய ஊடகங்களே எம்மை திரித்து கஷ்ட்டங்களுக்குள் ஆழ்த்துவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இதையிட்டு நாம் பெரிதும் வேதனையடைகிறோம். எமது ஏழை  மக்களின் துயர் துடைக்கும் கரங்களாயிருந்து,எமக்கு நியாயம் கிடைக்க உதவி புரியுங்கள்" என்கிறார்கள்.

No comments