About Me

header ads

ஏறாவூரில் இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை




மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா மற்றும் களுவன்கேணிக் கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட மீனவர்கள் நேற்றும் இன்றும் (சனி, ஞாயிறு) கடலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
குறித்த கடற்கரையில் நேற்று முந்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவர் உயிருடனும் மற்றையவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் இன்னொரு மாணவனின் சடலத்தை கடல் மீனவ சுழியோடிகளும், கடற்படைச் சுழியோடிகளும் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் கடலுக்குச் செல்வதிலிருந்து விலகி தமது தொழிலைக் கைவிட்டுள்ளனர்.
தமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
பேரலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் இன்னமும் கண்டு பிடிக்கப்படாமலிருக்கும் ஒரு மாணவனின் சடலத்தை கடற்படைச் சுழியோடிகள், மீனவ சுழியோடிழிகள் ஆகியோர் கரையோரக் கடல் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
கடலலை தொடர்ந்தும் சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருப்பதால் தேடும் முயற்சியில் சிரமம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments