Header Ads

Breaking News

கண்ணீரால் மூழ்கும் கனகபுரம், முழங்காவில் துயிலும் இல்லங்கள்!






இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த
தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி எழுப்பி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை னோதிராஜா ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்படுகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் மஞ்சள் – சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு சென்று விதையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments