About Me

header ads

நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்ற 3000 பேர் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு!




பொரளையில் இருந்து கோட்டே நோக்கி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வைத்தியபீட மாணவர்கள் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிசார் இன்று மாலை கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொண்டனர். பொலிஸாரின் பாதுகாப்பு தடைகளை மீறி, 3000 ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுளைய முற்பட்டதையடுத்து கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 
கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகங்களில் சிக்கிய மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments