About Me

header ads

அமைச்சரின் காரில் சென்ற பெண் எம்.பி : உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்





நாடாளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவருக்கு கடந்த செவ்வாய் கிழமை குறுந்தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அவசர பயணம் ஒன்றுக்காக அமைச்சரின் வாகனத்தை வழங்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் குறுந்தகவல் மூலம் கேட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரான பிரபல நடிகை கீதா குமாரசிங்க, அமைச்சர் சரத் அமுனுகமவிற்கு இந்த குறுந்தகவலை அனுப்பியிருந்தார்.
கீதாவின் குறுந்தகவல் கிடைத்ததும் அதற்கு அனுமதி வழங்கி அமைச்சர் அமுனுகம சமிக்ஞை காட்டினார்.
நடக்கும் இந்த சம்பவங்களை கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அமைச்சர் அமுனுகமவின் சமிக்ஞையை அடுத்து கீதா குமாரசிங்க சபையில் இருந்து வெளியேறினார். அப்போது கீதாவிடம் பேசிய கூட்டு எதிர்க்கட்சியின் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், வாகனத்தில் சென்றால் பரவாயில்லை அரசாங்கத்திற்கு சென்று விடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு செல்லும் அளவுக்கு தனக்கு விசர் பிடிக்கவில்லை எனக் கூறி கீதா சபையில் இருந்து வெளியேறி சென்றதாக பேசப்படுகிறது.

Post a Comment

0 Comments