பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

STAY WITH US

test banner

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, July 31, 2016

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு




பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசாருக்கு, அம்மாகாணத்தில் உள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க துறை கட்டடங்கள் மீது 10 முதல் 12 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு வீரர்களும், போலீசாரும் இணைந்து லாகூரில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரசாலா ஷேய்குபுரா மாவட்டத்தில் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 7 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், தீவிரவாதிகளின் மாபெரும் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தீவிரவாதிகள் பதுங்கி இருந்தால் சரணடைந்துவிடுமாறு எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு பதிலாக சோதனையில் ஈடுபட்டவர்கள் மீது அவர்கள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட்னர். நாங்களும் பதில் தாக்குதல் நடத்தினோம். சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இவ்வாறு தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. முன்னதாக கடந்த ஜூலை 13-ம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் ஓகரா நகரில் நடைபெற்ற சம்பவத்தில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages