Header Ads

Breaking News

அன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்




அன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்திருக்கும்  என கிழக்கு முதலமைச்சர் அல்ஹாபிழ் நசீர் அஹமத் தெரிவித்தார்.


சுய லாபங்கள் எதையும் முன்வைக்காது, தனது பிரதேச மக்களின் தேவைகளை மாத்திரம் முன் வைத்து, சமூகத்தின் உரிமை ரீதியிலான போராட்டத்துடன் இணைந்து கொண்டுள்ளமையானது ஆக்கபூர்வமான சிந்தனை கொண்ட இளைஞர்களின் எதிர்பார்ப்பினை வெளிக் கொணர்ந்துள்ளதாக  நேற்று முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.


அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளரான அன்வர் நௌஷாத் தனது ஆதரவாளர்கள் 50 க்கும் மேற்பட்டோருடன் முஸ்லீம் காங்கிரசில் இணைந்து கொண்ட நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தனது ஆக்கபூரவமான செயல்கள் மூலம் கிழக்கின் எல்லாப்பாகங்களிலும் அன்வர் நௌஷாத் செயற்பட்டுள்ளமையை உறுதி செய்யும் முகமாக இந்நிகழ்வில் முஸ்லீம் காங்கிரசின் மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ சிப்லி பாரூக், கௌரவ ஏ.எல் தவம், கௌரவ. ஆரிப் சம்சுதீன், கௌரவ. எம். லாகிர், கௌரவ.எம்.ஏ. அன்வர் ஆகியோர் நினைவுரை மற்றும் வரவேற்பு உரை நிகழ்த்தியதுடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ஏ.எல்.எம். நசீர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

கல்குடாத் தொகுதியில் வளர்ச்சிப் போக்கில் முழுக் கிழக்கு மாகாண சபையும் தங்களாலியன்றளவு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments